தாவாரத்தில் இருக்கவிட்டால் வீட்டில் பங்கு கேட்கின்றனர் – கூட்டமைப்பின் சிதைவு – பாரிய பாதிப்பு.!
7 view
தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டால் தமிழ் கட்சிகளுக்கு இடையில் பிளவு வந்துவிடும் என்பது ஒரு மரபாக மாறிவிட்டதாக அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்க் கட்சிகளின் குழப்பங்கள் தொடர்பாக இன்று யாழல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். கட்சி குழப்பங்கள் புதிய கூட்டுங்கள் மற்றும் கனடாவின் தடைவிதிப்பு உட்பட சீனாவின் ஆதிக்கம் என்பன குறித்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்கள் பேரவை இருந்த காலத்திலும் உள்ளுராட்சி தேர்தலின் போதே பிளவு ஏற்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு சிதைவடைகின்ற றிலைக்கு வந்துவிட்டதாக ஜோதிலிங்கம் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் விக்கினேஸ்வரன் ஆகியோர் தாங்களாகவே கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்ததாகவும் ஆனால் தற்போது செல்வம் அடைக்கலநாதன் மற்றும் சிர்த்தார்தன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலைமையே காணப்படுவதாக ஜோதிலிங்கம் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post தாவாரத்தில் இருக்கவிட்டால் வீட்டில் பங்கு கேட்கின்றனர் – கூட்டமைப்பின் சிதைவு – பாரிய பாதிப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாவாரத்தில் இருக்கவிட்டால் வீட்டில் பங்கு கேட்கின்றனர் – கூட்டமைப்பின் சிதைவு – பாரிய பாதிப்பு.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
