கைதிகளின் விடுதலை என்பது ஏமாற்று நாடகமே – சிறைக்குள் இருந்து கருத்து.!
7 view
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இந்த பொங்கலுக்கு முதல் விடுதலையாகி குடும்பத்துடன் இணைவார்கள் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அது பாரிய ஏமாற்றத்தை தந்துள்ளதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகன் கவலை வெளியிட்டுள்ளார். தைப்பொங்கலை முன்னிட்டு இன்று காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ‘இலவச பொங்கல்’ எனும் நிகழ்வு இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார். அத்துடன் மக்களுக்கு சிறையிலுள்ளவர்களின் வேதனைகளை எடுத்துக்காட்டு முகமாக வீதி நாடகமும் இன்று இடம்பெற்றிருந்தன.
The post கைதிகளின் விடுதலை என்பது ஏமாற்று நாடகமே – சிறைக்குள் இருந்து கருத்து.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதிகளின் விடுதலை என்பது ஏமாற்று நாடகமே – சிறைக்குள் இருந்து கருத்து.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
