யாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்!
7 view
தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, த.சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ், என்.சிறிகாந்தா தலைமையிலான தமிழ் தேசிய கட்சி என்பன புதிய கூட்டணியாக உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன. மேலும் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணி, ஜனநாயக போராளிகள் கட்சி உள்ளிட்ட மேலும் சில தரப்புகள் ஒன்றாக போட்டியிட இணக்கம் கண்டுள்ளதாக தெரியவருகிறது. ஆனாலும் கட்சிகளுக்கிடையே பொதுச் சின்னம் ஒன்றை கொண்டு வந்து உடன்பாட்டை ஏற்படுவதில் உள்ள தாமதம் காரணமாக கூட்டணி அறிவிப்பு தாமதமாகி வருகின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் ஆசன பங்கீடுகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. நேற்றைய கலந்துரையாடலில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் கட்சித்தலைவர்கள்…
The post யாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் சற்றுமுன் ஒன்றுகூடிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் முக்கியஸ்தர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
