அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே குடும்பத்துடன் வாழ்வேன் – கண்ணீர் சிந்திய ரகுபதி சர்மா.!

7 view
சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே தனது குடுப்பத்துடன் சேர்ந்து வாழப்போவதாக அரசியல் கைதியாக இருந்து அண்மையில் விடுதலை செய்யப்பட்ட இந்து மத குருவான பிரமஸ்ரீ சந்திர ஐயர் ரகுபதி சர்மா கண்ணீர் மல்க கவலை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மாத்திரமே இவர்களை விடுதலை செய்வதற்கான அதிகாரம் உள்ளதாகவும் எனவே ஜனாதிபதி அவர்களை விடுதலை செய்வதற்கு முன்வரவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தைப்பொங்கலை முன்னிட்டு இன்று காலை யாழ்.பல்கலைக்கழக முன்றலில் ‘இலவச பொங்கல்’ எனும் நிகழ்வு இடம்பெற்றது. குரல் அற்றவர்களுக்கான குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முருகையா கோமகனின் ஏற்பாட்டில் அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டிருந்தார்.
The post அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலையான பின்னரே குடும்பத்துடன் வாழ்வேன் – கண்ணீர் சிந்திய ரகுபதி சர்மா.! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース