யாழில் கராஜ்சிற்குள் நுழைந்த இ.போ.ச பேருந்து: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!
7 view
யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் சிறுப்பிட்டி பகுதியில் வளைவில் திரும்பிய போது கட்டுபாட்டை இழந்து அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றுக்குள் நுழைந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பஸ்ஸின் முன் பகுதி சேதமடைந்துள்ளது. இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. பஸ்ஸில் பயணித்த பயணிகளுக்கு தெய்வாதீனமாக எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதேவேளை வாகன திருத்தகத்தில் நின்று வேலை செய்தோரும் அந்த பகுதியில் சம்பவம் இடம்பெற்ற போது நிற்காததால் தெய்வாதீனமாக தப்பியுள்ளனர். திருத்தத்தில் நின்ற பேருந்து ஒன்றின் முன்பகுதியும் சேதமடைந்துள்ளது. அதேவேளை சம்பவ இடத்திற்கு வருகை தந்த இ.போ.ச பொறியியல் பிரிவினர் வருகை தந்து பஸ்ஸினை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
The post யாழில் கராஜ்சிற்குள் நுழைந்த இ.போ.ச பேருந்து: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் கராஜ்சிற்குள் நுழைந்த இ.போ.ச பேருந்து: மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
