ஆனந்த சங்கரி செய்தததையே இன்று கூட்டமைப்புக்குள் இருப்போர் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி ஆதங்கம்!
7 view
2004ஆம்ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா எப்படி தூக்கிச்சென்றாறோ அதேவேலையை இன்று 18வருடங்களுக்கு பின்னர் வீட்டுச்சின்னத்தையும் கட்சியையும் ஒரே கட்சியிலிருந்தவர்கள் தூக்கிச்சென்றுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலளார் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி பேரினவாதத்துடனேயே இணைந்து செயற்படும் என்பதனால் அவர்களுடன் எந்த கூட்டும் சேரமுடியாது எனவும் அவர் தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம்,தமிழீழ விடுதலை கழகத்தின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ம.நிஸ்கந்தராஜா ஆகியோரும் கருத்து தெரிவித்தனர். இந்த நாடு பொருளாதாரத்தில் மிகவும் மோசமான நிலையிலிருக்கும்போது ஒரு தேர்தலை நாங்கள் சந்திக்கவிருக்கின்றோம். உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சம்பந்தமான அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது. நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்யும் இறுதித்திகதி அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஒரு தரப்பு தேர்தலை…
The post ஆனந்த சங்கரி செய்தததையே இன்று கூட்டமைப்புக்குள் இருப்போர் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆனந்த சங்கரி செய்தததையே இன்று கூட்டமைப்புக்குள் இருப்போர் செய்கின்றனர்-கோவிந்தன் எம்.பி ஆதங்கம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
