இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்ல அரிய வாய்ப்பு!
13 view
அவுஸ்திரேலியாவில், தற்போது திறமையான பணியாளர்களுக்கான தேவை காணப்படுவதாக அங்கீகாரம் பெற்ற விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பலா தெரிவித்துள்ளார். பேச்சு நிகழ்ச்சியொன்றின் போது உரையாற்றிய கட்டுகம்பலா, நாட்டில் திறமையான பணியாளர்களுக்கு பற்றாக்குறை இருப்பதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவுஸ்திரேலியாவிற்கு வேலை வாய்ப்புக்காக புலம்பெயர்ந்து செல்ல முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். திறமையான இடம்பெயர்வு, வணிக இடம்பெயர்வு, முதலாளியினால் வழங்கப்படும் விசாக்கள், குடும்பப் புலம்பெயர்தல் மற்றும் புகழ்பெற்ற அல்லது உலகளாவிய திறமையாளர்களின் பிரிவுகளின் கீழ் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியாவிற்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்பு உள்ளது என கடுகம்பலா எடுத்துரைத்தார்.
The post இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்ல அரிய வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்ல அரிய வாய்ப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
