இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கிவைப்பு!

7 view
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கும் நிகழ்வு இன்று ஆரம்பமானது. அதன் முதல் நிகழ்வு இன்று கரைச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 150 குடும்பங்களிற்கு 18 ஆயிரம் ரூபா பெறுமதியான பவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் ஜெயகரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது குறித்த பவுச்சர்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டன. குறித்த நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிறிமோகனன், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கிளிநொச்சி கிளை தலைவர் சேதுபதி, செஞ்சிலுவைச்சங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன்போது வழங்கப்பட்ட பவுச்சர்கள் மூலம், மருந்து பொருட்கள், உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், சர்வதேச செஞ்சிலுவை சங்கங்கள் ஊடாக கர்ப்பிணிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் நலிந்த குடும்பங்களிற்கான உதவிகள் இவ்வாண்டு கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
The post இலங்கை செஞ்சிலுவை சங்கத்தால் 500 குடும்பங்களிற்கு அவசர உதவி வழங்கிவைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース