யாழ் – மண்டைதீவில், சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில்!
7 view
யாழ்ப்பாணம் – மண்டைதீவிவில், சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. வடமாகாண இளைஞர் யுவதிகளுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாணமட்ட கலந்துரையாடல் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தி விளையாட்டு மற்றும் பொருளாதாரத்தில் ஈடுபடுத்தி ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்துவது சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. இதன்போது யாழ்ப்பாணம் மண்டைதீவிவில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. மைதானத்திற்காக ஏற்கனவே 50 ஏக்கர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் 100 ஏக்கர் வரை தேவைப்படுவதாகவும் அதனை பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது . மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜிம்னாஸ்ட்டிக் அரங்கம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது . மேலும் மாவடங்கள்…
The post யாழ் – மண்டைதீவில், சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் – மண்டைதீவில், சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
