தீர்வு திட்டத்தினை சரியான நேரத்தில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் என்கிறது கூட்டணி!
7 view
தம்மிடம் தீர்வு திட்டம் உள்ளதாகவும் அதனை சரியான நேரத்தில் மக்களுக்கு தெரிவிப்போம் என தமிழர் விடுதலைக்கூட்டணி தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலைக்கூட்டணியின் மத்திய குழு கூட்டம் இன்று வவுனியாவில் கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்க கருத்து தெரிவித்த கட்சியின் ஊடக பேச்சாளர் அருண் தம்பிமுத்து இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் தமிழர் விடுதலைக்கூட்டணி தாயகப்பிரதேசத்தில் உள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் தனித்து போட்டியிடவுள்ளோம். எம்மோடு இணைந்து செயற்பட்ட அனைவரும் மீண்டும் வர வேண்டும் அதற்காக அனைவரையும் வரவேற்கின்றோம். பொருளாதார நெருக்கடியான காலத்திலே உள்ளுராட்சி மன்றங்களை ஒருமித்த கருதோடு சரியான முறையில் கொண்டு செல்ல வேண்டிய தேவையுள்ளது. எனவே அனைவரையும் வருவேற்கின்றோம். பல தசாப்தங்களுக்கு பின்னர் ஜனநாயக முறையிலான உள்ளுராட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. மக்கள் இந்த கடினமான காலத்திலும் கூட பங்குபெறவேண்டும். உள்ளுராட்சி மன்றங்கள் பல கட்சிகளை கொண்டு அமைந்தாலும் கூட மக்களுக்கான…
The post தீர்வு திட்டத்தினை சரியான நேரத்தில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் என்கிறது கூட்டணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தீர்வு திட்டத்தினை சரியான நேரத்தில் மக்களுக்கு வெளிப்படுத்துவோம் என்கிறது கூட்டணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
