கொள்ளைக்கார அரசியல் தலைவர்களுக்கு எந்த நாடும் தஞ்சமளிக்க கூடாது – சந்திரசேகரன் காட்டம்!

8 view
நாட்டை கொள்ளையடித்த அரச தலைவர்களுக்கு எந்த நாடும் தஞ்சமளிக்க கூடாது எனவும் மக்களாட்சியின் மூலம் தண்டனை கிடைக்க பெற வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் வலியுறுத்தியுள்ளார். மக்கள் விடுதலை முன்னணி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியுள்ளது. அதன் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளிற்கு பதிலளிக்கும் போதே இராமலிங்கம் சந்திரசேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விசேடமாக ரணில், ராஜபக்சவினுடைய அரசாங்கம் இந்த நாட்டின் ஊடகங்களை கண்டும் ஊடகவியாளரை கண்டும் அஞ்சுகின்றது. அதன் வெளிப்பாடாகவே இவர்களுடைய வரலாறு முழுவதும் விசேடமாக இந்த நாட்டின் பெறுமதிமிக்க ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்ட வரலாறாகவே உள்ளது. விசேடமாக இந்த நாட்டை கொள்ளையடித்தவர்கள் நாட்டை விட்டு செல்ல கூடாது. கொள்ளையர்களுக்கு எந்த ஒரு நாடும் தஞ்சம் அளிக்க கூடாது. கொள்ளையடித்த பணத்தை இலங்கை வாழ் மக்கள் மீட்டேடுக்கும் வரையில் இலங்கையிலே இருக்க வேண்டும். கடந்த காலங்களில்…
The post கொள்ளைக்கார அரசியல் தலைவர்களுக்கு எந்த நாடும் தஞ்சமளிக்க கூடாது – சந்திரசேகரன் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース