தைப்பொங்கலுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி!
8 view
தைப்பொங்கலை, முன்னிட்டு மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மாற்றுத் திறனாளிகள் 60 நபர்களுக்கு இன்று வியாழக்கிழமை மாலை “காப்போம்” அமைப்பினால் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. மூதூர் – முன்னம்பொடிவெட்டை அ.த.க பாடசாலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. தைப்பொங்கலை மாற்றுத்திறனாளிகளும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் காப்போம் அமைப்பானது இவ் மனிதாபிமான உதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், காப்போம் அமைப்பின் பணிப்பாளர் கு.பிரதீப்கான், திருகோணமலை மாவட்ட செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் த.பிரணவன், மூதூர் பிரதேச செயலக சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.சில்மியா, காப்போம் அமைப்பின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
The post தைப்பொங்கலுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தைப்பொங்கலுக்காக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
