வர்த்தக நிலையங்களுக்குள் திடீரென நுழைந்த சுகாதார பரிசோதகர்கள்; பல உணவகங்களுக்கு எச்சரிக்கை!

17 view
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியில் உள்ள  உணவகங்கள் மற்றும் வர்த்தக  நிலையங்கள்  என்பனவற்றிற்கு  இன்றைய  தினம் மல்லாவி  பிராந்திய  சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மல்லாவி பகுதிகளில் இருக்கும் வர்த்தக  நிலையங்கள் மற்றும் உணவகங்கள்  என்பனவற்றிற்கு திடீர் பரிசோதனைகளை  மேற்கொண்ட சுகாதார  பரிசோதகர்கள் வர்த்தக  நிலையங்கள்  மற்றும் உணவகங்களுக்கு  சுகாதார  நடைமுறைகளை  பின்பற்றி விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் உணவகங்களின் தரங்கள் பார்க்கப்பட்டும், இதே வேளையில் சுகாதார திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டிய உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களும் எச்சரிக்கையுடன் கூடிய காலக்கெடு வழங்கப்பட்டு   அறிவுறுத்தப்பட்டதோடு பாவனைக்குதவாத பொருட்கள் அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மல்லாவி  சுகாதார வைத்திய அதிகாரி  பணிமனைக்குற்பட்ட பகுதிகளில் குறித்த  திடீர்  பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தன. குறித்த பரிசோதனை நடவடிக்கைகளில்  சுகாதார வைத்திய அதிகாரி, மற்றும் சுகாதார பரிசோதகர்கள் ஈடுபட்டிருந்தனர்.
The post வர்த்தக நிலையங்களுக்குள் திடீரென நுழைந்த சுகாதார பரிசோதகர்கள்; பல உணவகங்களுக்கு எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース