கோட்டா வெளியேறி ரணில் வந்தாலும் நிலைமைகளில் மாற்றமில்லை! – மனித உரிமை கண்காணிப்பகம்
8 view
இலங்கையில் 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதிகள் மாறிய போதிலும் அது நாட்டின் மனித உரிமை நிலைமைகளில் எந்த முன்னேற்றத்திற்கு காரணமாக அமையவில்லை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமைகளை மீளாய்வு செய்யும் தனது 2023 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஊடாக மனித உரிமை கண்காணிப்பகம் இதனை இன்று தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். பல ஆண்டு தவறான நிர்வாகம் காரணமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமை, ஊழல், சட்டத்தின் ஆட்சியை ஒடுக்கியதன் பின்னர் உருவான கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் வீதியில் இறங்கி போராடினர். பாரதூரமான மனித உரிமை மீறல் தொடர்பில் நீண்டகாலமாக குற்றச்சாட்டை எதிர்நோக்கி வரும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த ஜூலை மாதம் பதவியில் இருந்து விலகினார். அதன் பின்னர் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரமசிங்க, பெரும்பாலும் அமைதியாக முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு போராட்டத்தை அடக்கினார்.…
The post கோட்டா வெளியேறி ரணில் வந்தாலும் நிலைமைகளில் மாற்றமில்லை! – மனித உரிமை கண்காணிப்பகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கோட்டா வெளியேறி ரணில் வந்தாலும் நிலைமைகளில் மாற்றமில்லை! – மனித உரிமை கண்காணிப்பகம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
