இலங்கையின் இயற்கை வளங்களை சர்வதேச கடனுக்கு ஈடுசெய்யும் அபாயம்!
8 view
சர்வதேச ரீதியில் இலங்கை பெற்றுள்ள கடனுக்கான இழப்பீடாக இலங்கையின் இயற்கை வளங்களை கையகப்படுத்துவதற்கு உலக வங்கியும் சில சக்திவாய்ந்த நாடுகளும் செயற்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘இயற்கைக்கான கடன்’ என்ற வேலைத்திட்டம் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என நாட்டின் சுற்றாடல் அதிகாரிகளும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் என அதன் தேசிய அமைப்பாளர் சுற்றாடல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் தெரிவித்தார். எவ்வாறாயினும், அது இந்த நாட்டுக்கு சாதகமான நிலை அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலக வங்கியும் நேபாளமும் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி இவ்வாறான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவீந்திர காரியவசம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post இலங்கையின் இயற்கை வளங்களை சர்வதேச கடனுக்கு ஈடுசெய்யும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையின் இயற்கை வளங்களை சர்வதேச கடனுக்கு ஈடுசெய்யும் அபாயம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
