முட்டைகளுடன் பயணித்த கப்ரக வாகனம் கோர விபத்து – ஒருவர் பலி!
18 view
குளியாபிட்டிய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி முட்டைகளை ஏற்றி பயணித்த சிறிய ரக கப்ரக வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பார ஊர்தியில் மோதுண்டத்தில் முட்டை வாகனத்தின் பயணித்த இருவர் படுகாயம் அடைந்தனர். முட்டை வாகனத்தில் பயணித்த சாரதி படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், முட்டை வாகனத்தில் பயணித்த உதவியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பளை வேம்போர் கேனி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ரமேஷ்வரன் சாரங்கன் என்பவராவார். உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீசார் மேற்கொண்டு வருகின்றார்
The post முட்டைகளுடன் பயணித்த கப்ரக வாகனம் கோர விபத்து – ஒருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டைகளுடன் பயணித்த கப்ரக வாகனம் கோர விபத்து – ஒருவர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
