நாளை உதயமாகின்றது ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி!
13 view
முக்கிய தமிழ் கட்சிகள் சில ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான கூட்டணி ஒப்பந்தம் நாளை(வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் கைச்சாத்திடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை தனித்துச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, ரெலோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்தின் கொழும்பு இல்லத்தில் கட்சித் தலைவர்கள் சந்தித்துக் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சந்திப்பில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ்., தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணியின் பெயர், சின்னம் என்பன தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளருடன் 5 கட்சியினரும் கலந்துரையாடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
The post நாளை உதயமாகின்றது ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாளை உதயமாகின்றது ஐந்து தமிழ்க் கட்சிகள் இணையும் புதிய கூட்டணி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
