குறைந்தது பொருட்களின் விலை! பண்டிகை காலத்தில் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு
6 view
லங்கா சதொச நிறுவனம் 04 வகையான பொருட்களின் விலையை குறைத்துள்ளது. அதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாக உள்ளது. உள்ளூர் வெள்ளை அரிசி 16 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 189 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும் உள்ளூர் நாடு அரசி 02 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 198 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் கோதுமை மா 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும். ஏற்கனவே பல அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 4 பொருட்களின் விலைகள் இன்று குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
The post குறைந்தது பொருட்களின் விலை! பண்டிகை காலத்தில் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைந்தது பொருட்களின் விலை! பண்டிகை காலத்தில் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
