சுவாமி விவேகானந்தரின் 160ஆவது பிறந்தநாள் நினைவுதினம்!
6 view
வவுனியா புகையிரத நிலைய வீதிலுள்ள சுவாமி விவேகானந்தரின் நினைவுத் தூபியில் இன்று (12) காலை 9 மணியளவில் அன்னாரின் 160 ஆவது பிறந்ததின நினைவு தினம் இடம்பெற்றது. சிலையினை பராமரிக்கும் சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அனுசரணையில் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் நகரசபையின் உபதபிசாளர் சு.குமாரசாமி தலைமையில் இடம்பெற்ற நினைவு தின நிகழ்வில் சிறப்புச் சொற்பொழிவினை தமிழ் மணி அகளங்கன் நிகழ்த்தினார். இதையடுத்து மலர் மாலை அணிவித்து, மலர் தூவி நினைவு தின நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் தலைவர் ப.சத்தியநாதன் மற்றும் உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்களான பிரதாப், சுமந்திரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ரவீந்திரன், சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
The post சுவாமி விவேகானந்தரின் 160ஆவது பிறந்தநாள் நினைவுதினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சுவாமி விவேகானந்தரின் 160ஆவது பிறந்தநாள் நினைவுதினம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
