சட்டவிரோதமாக மணல் கடத்தல் – ஒருவர் கைது!
6 view
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படுகேணி பிரதேசத்தில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சட்டவிரோதமாக மணல் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ரிப்பர் வாகனத்தை செலுத்திய சாரதி இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதா பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
The post சட்டவிரோதமாக மணல் கடத்தல் – ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சட்டவிரோதமாக மணல் கடத்தல் – ஒருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
