மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று!
6 view
போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனத் தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட பலருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளும் கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் குறித்த மனுக்களின் தீர்ப்பு, இன்று 12 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, எல்.டி.பி.தெஹிதெனிய, முர்து பெர்ணான்டோ, எஸ். துரைராஜா, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தன. உயர்நீதிமன்றம் வழக்கை நிறைவுறுத்தி அனைத்துத் தரப்பினரும் தமது எழுத்து மூல சமர்ப்பணங்களை கடந்த 2022 ஒக்டோபர் 5 ஆம் திகதியிலிருந்து 3 வாரங்களுக்குள் சமர்ப்பிக்க…
The post மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மைத்திரி உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு எதிரான ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு இன்று! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
