தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம் – சேனாதிராஜா!
6 view
கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம் என தமிழரசுகட்சியின் செயற்குழு உறுப்பினரும் , முன்னாள் நகரசபை உறுப்பினருமான நா.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் 5 உள்ளுராட்சி மன்றங்கள் உள்ள நிலையில் 4 சபைகளுக்கு போட்டி இடுவதற்காக இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதன் போது கருத்து தெரிவித்த செயற்குழு உறுப்பினர் வவுனியா மாவட்டத்தில் இருக்கின்ற மூன்று பிரதேச சபைக்கும் ஒரு மாநகர சபைக்குமான உள்ளூராட்சி தேர்தலிற்கான கட்டுப்பணத்தினை இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பாக செலுத்தியுள்ளோம். தற்போதுள்ள தேர்தல் முறையின் படியும் அரசியல் சட்டத்தின்படியும் நூற்றுக்கு அறுபது வீதமான வாக்குகள் தான் கட்சியினால் பெற்றுக்கொள்ள முடிகிறது. ஏனைய நாற்பது வீதமான கட்சிகளெல்லாம் உதிரிக்கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் பெற்றுக்கொண்டு போவதனால் சபைகளை ஒழுங்கான முறையில் நிர்வகிக்க முடியாத சூழல் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டதனை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அதனால் தான் மீதமுள்ள நாற்பது வீதமுள்ளவற்றையும் நாங்கள் பெற்றுக்கொள்ள மூன்று கட்சிகளும் தனித்தனியாக…
The post தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம் – சேனாதிராஜா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தனித்தனியாக போட்டியிட்டு பின்னர் கூட்டமைப்பாக செயற்படுவோம் – சேனாதிராஜா! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
