இலங்கையில், நடந்தது இனப்படுகொலையே – கனடாவின் தடையே இதற்கு சாட்சி – சிறிதரன்!
12 view
2009 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த மகிந்த ராஜபக்ச மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அவரது சகோதரர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக கனடா அரசாங்கம் விதித்துள்ள தடையானது இலங்கையில் ஒரு இனப்படுகொலை நடந்துள்ளது என்பதை ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன் தமிழ் மக்களுடன் கனடா அரசாங்கம் தொடர்ந்து பக்கபலமாக இருப்பது ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களில் பாரிய ஆதரவை தந்துள்ளதாக அவர் மகிழ்ச்சி வெளியிட்டிருந்தார். கிளிநொச்சியில் எமது செய்தி பிரிவிற்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
The post இலங்கையில், நடந்தது இனப்படுகொலையே – கனடாவின் தடையே இதற்கு சாட்சி – சிறிதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில், நடந்தது இனப்படுகொலையே – கனடாவின் தடையே இதற்கு சாட்சி – சிறிதரன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
