ரணில் மற்றும் மகிந்தவின் முகமூடி கிழிந்தது! – ஹிருணிகா
6 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் முகமூடி கிழிந்து முழு நாட்டுக்கும் வெட்டவெளிச்சமானது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான கள்ளத்தொடர்பை நாட்டில் உள்ள அனைவரும் தற்போது அறிவார்கள். உண்மையான மக்களின் ஆணைக்கு பயப்படும் அரசாங்கம் எப்படியாவது தேர்தலை ஒத்திவைக்க முயற்சித்து வருகிறது. அரசாங்க அதிபர்களுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்ட கடிதங்கள் மூலம் அது தெளிவாகியுள்ளது எனவும் ஹிருணிகா பிரேமச்சந்திர மேலும் கூறியுள்ளார்.
The post ரணில் மற்றும் மகிந்தவின் முகமூடி கிழிந்தது! – ஹிருணிகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் மற்றும் மகிந்தவின் முகமூடி கிழிந்தது! – ஹிருணிகா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
