புலிகளை பிளவுபடுத்திய ரணில் கூட்டமைப்பையும் பிரித்துவிட்டார்! – அம்மான் படையணி கருத்து
7 view
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் தந்திரமிக்க ஒருவர் என்றும் முன்பு விடுதலைப்புலிளை பிரித்ததாகவும் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவுபடுத்தியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெயா சரவணன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்து இருந்தால் ஜனாதிபதி கூறியிருந்தது போல குறிப்பிட்ட கால எல்லைக்குள் தீர்வுகளை வழங்கவேண்டிய நிலை ஏற்படும் என்ற காரணத்தால் கூட்டமைப்பை பிளவு படுத்தியிருப்பதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விலைபோயுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை காலமும் தமிழ் தேசியகூட்டமைப்பினர் ஒன்றிணைந்திருந்து தமிழர்களுக்காக ஒன்றும் செய்ததில்லை. வருங்காலங்களில் கூட்டமைப்பு இணைந்திருப்பதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை என்றும் பிரிந்து செல்வதே நல்லது எனவும் ஜெயா சரவணன் குறிப்பிட்டுள்ளார். பல நாடுகளின் அழுத்தத்தின் காரணமாகவே கூட்டமைப்பு இணைந்து இருந்ததாகவும் வருங்காலங்களில் அவர்கள் தனித்து செயற்படட்டும் எனவும் ஒரு குடையின்…
The post புலிகளை பிளவுபடுத்திய ரணில் கூட்டமைப்பையும் பிரித்துவிட்டார்! – அம்மான் படையணி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புலிகளை பிளவுபடுத்திய ரணில் கூட்டமைப்பையும் பிரித்துவிட்டார்! – அம்மான் படையணி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
