கறுப்பு வாரமாக பிரகடனம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
5 view
ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள வாரத்தை கறுப்பு வாரமாக பெயரிடப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் வரிக் கொள்கைகளின் பாதகங்களை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பல தடவைகள் சுட்டிக்காட்டிய போதிலும், அரசாங்கம் அவற்றைப் புறக்கணித்தமைக்கு எதிராக பாரிய அளவிலான எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஏற்பாடு செய்யவுள்ளதாக் ஹரித அலுத்கே குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உரிய தீர்வை வழங்காவிடின் தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து பாரியளவிலான போராட்டத்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
The post கறுப்பு வாரமாக பிரகடனம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கறுப்பு வாரமாக பிரகடனம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
