பண மோசடிக்கு உதவிய சம்பவம் – பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை
6 view
திலினி பிரியமாலிக்கு பண மோசடிக்கு உதவிய சம்பவம் தொடர்பில் பிணையில் உள்ள பொரளை சிறிசுமண தேரரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (11) பிடியாணை பிறப்பித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன உள்ளிட்ட சந்தேக நபர்கள் பிணையில் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
The post பண மோசடிக்கு உதவிய சம்பவம் – பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண மோசடிக்கு உதவிய சம்பவம் – பொரளை சிறிசுமண தேரருக்கு பிடியாணை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
