தேர்தல் மூலம் பதிலடி வழங்க மக்கள் தயாராகிவிட்டனர்- எல்லே குணவங்ச தேரர் தெரிவிப்பு!
7 view
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மக்கள் இந்த அரசாங்கத்திற்குரிய பதிலை வழங்குவார்கள் என்றும் இனி மக்கள் ஒருபோதும் ஏமாறப்போவதில்லை என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களிலில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, 74 ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்தவர்கள் செய்த ஊழல் மோசடிகளே காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் மின்கட்டணங்களை அதிகரித்து, மக்களை கஸ்டத்திற்கு உள்ளாக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கு எவ்வித மன்னிப்பையும் வழங்கக்கூடாது எனவும் எல்லே குணவங்ச தேரர் குறிப்பிட்டிருந்தார் . அத்துடன் மின்சக்தி அமைச்சருக்கு மக்கள் மீது அக்கறையில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
The post தேர்தல் மூலம் பதிலடி வழங்க மக்கள் தயாராகிவிட்டனர்- எல்லே குணவங்ச தேரர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தல் மூலம் பதிலடி வழங்க மக்கள் தயாராகிவிட்டனர்- எல்லே குணவங்ச தேரர் தெரிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
