மஹிந்த, கோட்டா மீது கனடாவின் தடை விதிப்பு பொறுப்பற்ற செயலாம்! – அலி சப்ரி

6 view
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் மீதான தடை ஒரு பொறுப்பற்ற செயல் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடா பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடர்பில் இராஜதந்திர ஆட்சேபனை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர், இன்று காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார். நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது ஒரு பொறுப்பற்ற செயலாகுமென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கனடா உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்தார் புலம்பெயர் தமிழர்களை மகிழ்விப்பதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய நடவடிக்கை பயனற்றது என்றும் இது இலங்கையில் உள்ள சமூகங்களை துருவப்படுத்தக் கூடிய செயற்பாடு என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
The post மஹிந்த, கோட்டா மீது கனடாவின் தடை விதிப்பு பொறுப்பற்ற செயலாம்! – அலி சப்ரி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース