புத்தியுடைய ஜனநாயக ஆட்சியாளரா ரணில்? கேள்வி எழுப்பிய புத்திஜீவிகள் ஒன்றியம்!
6 view
சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவை அச்சுறுத்துவதற்கு ஜனாதிபதிக்கு எந்த உரிமை இல்லை என மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் உபதலைவர் கலாநிதி அதுலசிறி சமரக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். புத்தியுடைய ஜனநாயக ஆட்சியாளர் என்றால் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு செயற்பட்டிருக்கமாட்டார் என்றும் அதுலசிறி சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை தேர்தல் ஆணைக்குழுவிற்குள் முறையற்ற செயற்படுகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அரசியல் வட்டார தகவலுக்கு அமைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தில் உள்ள உயர் அதிகாரிகள் தேர்தல் ஆணைக்குழுவில் பிளவினை உருவாக்கவும் ஒருமைப்பாட்டை இல்லாமை செய்யவும் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதகவும் அதுலசிறி சமரக்கோன் தெரிவித்திருந்தார். தேர்தல் நடைபெறுவதை தடுக்க அரசாங்கம் முடிந்தவற்றை செய்துகொண்டே இருப்பதாக மக்களுக்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் உபதலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
The post புத்தியுடைய ஜனநாயக ஆட்சியாளரா ரணில்? கேள்வி எழுப்பிய புத்திஜீவிகள் ஒன்றியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தியுடைய ஜனநாயக ஆட்சியாளரா ரணில்? கேள்வி எழுப்பிய புத்திஜீவிகள் ஒன்றியம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
