போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்த அம்பாறை இளைஞன்!
7 view
“போதையை ஒழிப்போம் பாடசாலை மாணவர்களை காப்போம்” எனும் தொனிப் பொருளில் விழிப்புணர்வு தனிநபர் சைக்கிள் ஓட்டம் இன்று புதன்கிழமை காலை 6.30 மணியளவில் திருகோணமலை கிழக்குமாகான சபையில் வைத்து ஆரம்பமானது.கிழக்குமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் இதனை ஆரம்பித்து வைத்தார். அம்பாறை – பொத்துவில் பகுதியைச் சேர்ந்த சுல்பிகார் என்ற சைக்கிள் ஓட்ட வீரர் இந்த விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டத்தில் ஈடுபடுகின்றார். திருகோணமலையிலிருந்து பொத்துவில் அறுகம்பை வரையான இத் தனிநபர் சைக்கிள் ஓட்டம் இன்று மாலை அருகம்பையை சென்றடைந்து நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்த அம்பாறை இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போதைப் பொருள் பாவனைக்கெதிராக விழிப்புணர்வு சைக்கிள் ஓட்டத்தை ஆரம்பித்த அம்பாறை இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
