ஆய்வுகூடத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவை வழங்க மறுக்கும் அதிகாரிகள் – நோயாளர்கள் சிரமம்
15 view
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் ஆய்வுகூடத் தொழிநுட்பவியலாளர்களின் (எம்.எல்.ரி.) மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்காதமையால் அவர்கள் தங்கள் கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரம் கடமையாற்றாதமையால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். -இவ்வாறு தெரிவித்தார் தெல்லிப்பழை ஆதார வைத்தியநாலை நோயாளர் நலன்புரிச் சங்க செயலாளர் சி.ஹரிகரன். இது தொடர்பில் அவர் இன்று கருத்து தெரிவித்தவை வருமாறு, வடக்கு மாகாணத்துக்குட்பட்ட வைத்தியசாலைகளில் கடமையாற்றும் ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வடக்கு மாகாண அதிகாரிகள் வழங்க மறுப்பதன் காரணமாகவே அவர்கள் தமது வேலைநாள்கள் தவிர்ந்த சனி, ஞாயிறு, விடுமுறை தினங்கள் மற்றும் பிற்பகல் 4 மணிக்குப் பின்னர் கடமையாற்றாது தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்துள்ளார்கள். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 8 ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்கள் கடமையாற்றவேண்டிய இடத்தில் தற்போது 4 பேர் மட்டும் கடமையாற்றி, இந்த வருடம் புதிதாக ஒருவருமாக ஐவர் மட்டுமே கடமையாற்றுகின்றார்கள். இவர்களுக்கு கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு மேலதிக…
The post ஆய்வுகூடத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவை வழங்க மறுக்கும் அதிகாரிகள் – நோயாளர்கள் சிரமம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆய்வுகூடத் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவை வழங்க மறுக்கும் அதிகாரிகள் – நோயாளர்கள் சிரமம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
