தனித்து போட்டியிட்டாலும் ஒன்றாவே ஆட்சி அமைப்போம்- தமிழரசு கட்சி திட்டவட்டம்!

6 view
உள்ளுராட்சி தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டாலும் ஆட்சி அமைக்கும் போது ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கவுள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்றையதினம்(11)  மூன்று சபைகளுக்கான கட்டுப்பணங்களை தமிழரசு கட்சி செலுத்திய பின்னர் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.  தற்போதுள்ள தேர்தல் முறையின் பிரகாரம் ஒரு கட்சியால் 60 வீதமான வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் எனவே இதனை மேலும் அதிகரிப்பதற்காகவே தனித்தனியே தாம் போடியிடுவதற்கு தீர்மானித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தல் உள்ளுராட்சி தேர்தல் எனவும் இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் இதில் வெற்றி பெற்றால்  ஐநாவிற்கு செல்வதே அல்லது உலக நாடுகளுக்கு அறிக்கை விடுவதோ தமது வேலை இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post தனித்து போட்டியிட்டாலும் ஒன்றாவே ஆட்சி அமைப்போம்- தமிழரசு கட்சி திட்டவட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース