சுமந்திரன், மனோ கணேசன் சென்னைக்கு பயணம்

12 view
இந்தியாவின் தமிழ்நாட்டில் இன்றும்(11) நாளையும்(12) நடைபெறும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் ஆகியோர் நேற்று சென்னை பயணமாகினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அயலக தமிழர் தின விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வதற்கு மனோ கணேசன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் தமிழக அரசினால் அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால் இலங்கை அரசுக்கும், தமிழர் தரப்புக்கும் இடையிலான பேச்சுக்கள் இந்தத் திகதிகளில் தொடர்ந்து நடைபெறும் என்ற ஏற்பாடு முன்னர் இருந்ததால், தமிழக அரசின் நிகழ்ச்சியில் சுமந்திரன் பங்குபற்றுவாரா என்பது சந்தேகத்திற்குரியதாக இருந்தது. ஆனால், இலங்கை அரசு – தமிழர் தரப்பு இடையிலான பேச்சுக்கள் நேற்று(10) மாலையுடன் இடைநிறுத்தப்பட்டு ஒரு வாரம் தள்ளிப்போடப்பட்டதை அடுத்து, தமிழக அரசின் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சுமந்திரன் சென்னை பயணமானார்.  அவர் நாளை மறுதினம் நாடு திரும்புவார்…
The post சுமந்திரன், மனோ கணேசன் சென்னைக்கு பயணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース