தாய் வீட்டில் இணைந்தார் ஹிஸ்புல்லாஹ் – முஸ்லீம்களை ஒன்றுபடுத்தவே திடீர் முடிவு!
13 view
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பது தனது தாய் வீடு என்றும் அதில் இணைந்து உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். புதிய கட்சிகளை உருவாக்கினால் முஸ்லிம்களின் பல வழிகளில் பிரிந்து சென்று விடுவார்கள் என்றும் அதனாலேயே புதிய கட்சியினை தாம் ஆரம்பிக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் மொத்தமாக இணைந்து கொண்டதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். இதன்போது கட்சியின் தலைவரான ரவூப் ஹக்கீம் முன்னிலையில் இந்த நிகழ்வு நேற்று நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
The post தாய் வீட்டில் இணைந்தார் ஹிஸ்புல்லாஹ் – முஸ்லீம்களை ஒன்றுபடுத்தவே திடீர் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தாய் வீட்டில் இணைந்தார் ஹிஸ்புல்லாஹ் – முஸ்லீம்களை ஒன்றுபடுத்தவே திடீர் முடிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
