யாழில் களை கட்டிய வாரிசு: தளபதி ரசிகர்கள் வெறித்தனம்!
12 view
நீண்ட இடைவெளிக்கு பிறகு இளையதளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் இன்று அதிகாலை வெளியான திரைப்படம்தான் வாரிசு. குறித்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவும் அதேவேளை பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்த படமாக வாரிசு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 4.30 மணிக்கு வாரிசு திரைப்பட விசேட காட்சி காண்பிக்கப்பட்டது. இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் முதலாவது காட்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்ற துடிப்பில் யாழிலுள்ள திரையரங்குகளின் முன்னால் நள்ளிரவு முதல் இளையதளபதி ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருந்ததனர். இவ்வாறான நிலையில் இன்று வெளியான வாரிசு திரைப்படம் தொடர்பில் கருத்து தெரிவித்த இளையதளபதி ரசிகர்கள் ” குறித்த படம் மாஸ்” எனவும் “தளபதிதான் பெஸ்ட்டு” “படம் வேற லெவல்” “எதிர்பார்த்ததை விட சூப்பர்” எனவும் தமது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
The post யாழில் களை கட்டிய வாரிசு: தளபதி ரசிகர்கள் வெறித்தனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் களை கட்டிய வாரிசு: தளபதி ரசிகர்கள் வெறித்தனம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
