ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

13 view
இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலை காரணமாக வங்கிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். ஓய்வூதியத்திற்காக மாதாந்தம் சுமார் 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமுர்த்தி உள்ளிட்ட அரச மானியங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்ட திகதிகளில் வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
The post ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース