கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் மரணமடைந்த இலங்கையர் !
7 view
இலங்கையை பூர்வீகமாக கொண்ட கனேடிய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனைய பகுதியில் இன்று (10) காலை கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். புத்திக கருணாரத்ன என்ற 54 வயதான பயணி பெத்தேகன பிரதேசத்தில் வசித்து வந்தவர். அவரும் அவரது தாயாரும் இன்று அதிகாலை 02.18 மணியளவில் கட்டார் எயார்வேஸ் விமானமான QRR-662 இல் கத்தாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். தனது தாயை கனடாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரும் போது, அதிகாலை 03.50 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தின் முன் மண்டபத்தின் ஊடாக சென்று கொண்டிருந்த போது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அவரது சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. The post கனடாவில்…
The post கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் மரணமடைந்த இலங்கையர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்து விமான நிலையத்தில் மரணமடைந்த இலங்கையர் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
