தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தவேண்டும் – கோ.ராஜ்குமார் காட்டம்!
6 view
தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாடுகளையே தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ளவர்கள் முன்னெடுப்பதாகவும் எனவே அவர் பிரிவதாலே அல்லது சேர்வதனாலோ எந்த பாதிப்பும் இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள போராட்ட தளத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே கோ.ராஜ்குமார்இவ்வாறு தெரிவித்திருந்தார். தயவு செய்து தமிழர்களை ஏமாற்ற வேண்டாமெனவு 75 வருடங்களாக சிங்களவர்களால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கோ.ராஜ்குமார் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவாலும், 1936 முதல் தமிழ் அரசியல்வாதிகளாலும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவிலும் கனடாவிலும் இருந்து வருகின்ற எம்.ஏ.சுமந்திரனுக்கு ஆதரவானவர்களும் இந்தியாவுக்கும் ஆதரவான புலம்பெயர் குழு தமிழ் மக்களை முட்டாளாக்க ஆரம்பித்துள்ளதாக கோ.ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்.
The post தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தவேண்டும் – கோ.ராஜ்குமார் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிறுத்தவேண்டும் – கோ.ராஜ்குமார் காட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
