கல்விக் கூட்டுறவு சங்கத்துக்கு முன் போராட்டம் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அதிரடி அறிவிப்பு

8 view
கல்விக் கூட்டுறவு சங்கத்தின் புதிய பணிப்பாளர் சபையை ஜனநாயகரீதியில் தேர்தலை நடாத்தி மிக விரைவில் உருவாக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி நாளைய தினம் மாலை இரண்டு மணி அளவில் கல்விக் கூட்டுறவு சங்கத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றபோதே அச்சங்கத்தின் யாழ் மாவட்ட செயலாளர் ஜெயராஜகுலேந்திரன் வோல்வின் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவிக்கையில், இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசர்கள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பணிப்பாளர் சபை உருவாக்கும் வரை ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் சந்தா பணத்தை செலுத்துவதை தவிர்க்குமாறு இதன் போது வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.  அத்துடன் புதிய அங்கத்தவர்கள் இணைந்து கொள்ள வேண்டாம் எனவும் இதன்போது வோல்வின் கருத்து தெரிவித்தார்.
The post கல்விக் கூட்டுறவு சங்கத்துக்கு முன் போராட்டம் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース