பாவனைக்குதவாத 1000 கிலோ அரிசி மீட்பு – ஆதங்கப்பட்ட மக்கள்!
7 view
கடந்த காலத்தில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது கூட பதுக்கி வைக்கப்பட்டு பழுதடைந்த சுமார் 1000 கிலோவிற்கும் அதிகமான அரிசிகள் பதுளை மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளன. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மக்கள் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர். கடந்த காலத்தில் சீரற்ற வானிலை மற்றும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பட்டினியால் அவதியுற்ற போதும் இந்த அரிசி மூட்டைகள் அந்த மக்களுக்கு வழங்கப்படவில்லை என கவலை வெளியிட்டனர். எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி எந்த கட்சியினரான இருந்தாலும் சரி மக்களுக்கு இவ்வாறு அநீதி இழைக்க வேண்டாம் எனவும் யாரிற்கும் நன்மை இல்லாத வகையில் இவ்வாறு செயற்பட வேண்டாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
The post பாவனைக்குதவாத 1000 கிலோ அரிசி மீட்பு – ஆதங்கப்பட்ட மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாவனைக்குதவாத 1000 கிலோ அரிசி மீட்பு – ஆதங்கப்பட்ட மக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
