மட்டக்களப்பில் இன்று தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய தமிழரசுக்கட்சி!

6 view
கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான அரசியல் கட்சியொன்று தனது கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது. வடகிழக்கு மாகாணத்தில் தனித்து களமிறங்கவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியானது மட்டக்களப்பில் இன்று தனது உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கட்டுப்பணத்தினை செலுத்தினார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்காக இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சிசபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
The post மட்டக்களப்பில் இன்று தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய தமிழரசுக்கட்சி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース