பண்டிகை கால வியாபாரத்தில் பல லட்சங்களை சுருட்டிய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம்
6 view
மன்னார் நகரசபை வீதிகளில் கடந்த மாதம் அமைக்கப்பட்ட பண்டிகை கால வியாபார நிலையங்களுக்கான மின் விநியோகத்தில் பல லட்சங்களை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளது மன்னார் நகரசபை எல்லைக்குள் ஆண்டு தோறும் இடம்பெறும் பண்டிகை கால வியாபர விற்பனையில் வெளி மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான வியாபரிகள் கடைகளை குத்தகைக்கு பெற்று வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வது வழமை. இம்முறை அவ்வாறு வருகை தந்த வியாபாரிகளிடன் மின் கட்டணம் என்ற பெயரில் பல லட்சம் ரூபாய் பணத்தை மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் சுருட்டியுள்ளது. இம் முறை மன்னார் நகர் பகுதியில் 300 வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் காலை ஆறு மணிதொடக்கம் நள்ளிரவு ஒரு மணிவரை மின்சாரம் வழங்குவதற்கு ஒவ்வொரு வியாபர நிலையத்திற்கும் ஒரு மின்குமிழுக்கு 250 ரூபா விதம் மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் வசூலித்துள்ளது. ஒவ்வொரு கடைகளிலும் 2 தொடக்கம் 10 மின் குமிழ் வரை பொருத்தப்பட்டிருந்த நிலையில்…
The post பண்டிகை கால வியாபாரத்தில் பல லட்சங்களை சுருட்டிய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பண்டிகை கால வியாபாரத்தில் பல லட்சங்களை சுருட்டிய மன்னார் நகரசபை நலன்புரி சங்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
