தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் தனித்து போட்டி! – பிள்ளையானின் கட்சி அதிரடி அறிவிப்பு

6 view
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார். அத்துடன் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும்  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் உயர்மட்டக்குழு கூடியதன் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பூபாலப்பிள்ளை பிரசாந்தன் குறிப்பிட்டார். மேலும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களிலும் மற்றும் பொலநறுவை ஆகிய மாவட்டங்களில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் இடங்களிலும் படகு சின்னத்தில் தனித்துவமாக போட்டியிடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
The post தமிழர்கள் அதிகம் உள்ள இடங்களில் தனித்து போட்டி! – பிள்ளையானின் கட்சி அதிரடி அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース