கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்!
13 view
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள மூன்று பங்காளிக் கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவது எனக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஊடகங்களிடம் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது என்று சுமந்திரன் எம்.பி. கூறினார். சம்பந்தன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜாவும், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் பங்கேற்றனர். ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., பொதுச்செயலாளர் கோவிந்தன் கருணாகரம் எம்.பி. மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். புளொட் சார்பில் ஆர்.ராகவன் பங்கேற்றார். சுகயீனம் காரணமாகப் புளொட்…
The post கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கூட்டமைப்பிலுள்ள பங்காளிக் கட்சிகள் தேர்தலில் தனித்துப் போட்டியிட தீர்மானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
