பொதுஜன பெரமுனவின் தலைவரை மாற்றவில்லை – தோல்வி பயத்தில் உளறும் எம்.பி

6 view
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு சில கட்சிகள் இன்னும் தயார் நிலையில் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.   குருநாகல் மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு பொது ஜன பெரமுனவினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு தயார் இல்லாத காரணத்தால் சில கட்சியினர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்று பொய் கூறுவதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த தேர்தலுக்கு தலைமைத்துவம் வழங்குவது முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச என்றும் தாம் தலைவரை மாற்றவில்லை எனவும் தேர்தலை நடத்தி முடிவுகளை எட்டவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி மன்றங்களுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் தலைமையில் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை பொதுஜன பெரமுன செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
The post பொதுஜன பெரமுனவின் தலைவரை மாற்றவில்லை – தோல்வி பயத்தில் உளறும் எம்.பி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース