நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49வது நினைவேந்தல் நிகழ்வு!
5 view
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றையதினம் யாழ் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னாள் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. முன்னதாக உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுதூபிகளுக்கு முன் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் நினைவேந்தல் நிகழ்வில்நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவஞானம், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம், மறவன்புலவு சச்சிதானந்தன் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
The post நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49வது நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 49வது நினைவேந்தல் நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
