முட்டை இறக்குமதி கேள்வி பத்திரம் – 20 விலைமனுக்கள் கையளிப்பு!
18 view
முட்டை இறக்குமதி கேள்வி பத்திரத்திற்கமைவாக 20 பேர் விலைமனுக்களை கையளித்துள்ளனர். இன்று பிற்பகல் அது தொடர்பான விலைமனுக்கோரல் நிறைவுறுத்தப்பட்டது. இது தொடர்பான விலைமனுக்கோரல்கள் இறுதி அனுமதிக்காக வர்த்தக அமைச்சின் தொழில்நுட்ப குழுவிடம் கையளிக்கப்பட்டதாக இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். முட்டை இறக்குமதிக்காக விலை மனுக்களை கையளித்த அனைத்து இறக்குமதியாளர்களும் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்களை முன்வைத்துள்ளனர். அதில் பெரும்பாலான விண்ணப்பத்தாரிகள் இந்தியர்கள் என இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
The post முட்டை இறக்குமதி கேள்வி பத்திரம் – 20 விலைமனுக்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post முட்டை இறக்குமதி கேள்வி பத்திரம் – 20 விலைமனுக்கள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
