குறைந்த செலவில் தேர்தலை நடத்தமுடியும்- சமன் ஸ்ரீ ரத்னாயக்க கருத்து!
6 view
எதிர்பார்த்த தொகையை விடவும் குறைந்த நிதியில் தேர்தலை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். தற்போது தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா நிதி தேவை என்றும் சில சமயங்களில் அதை விட குறைவாகவே தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த முறை 8 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கொரோனா கட்டுப்பாடுகளின் மத்தியில் அது 5.8 பில்லியன் ரூபாவாக குறைவடைந்ததாகவும் இதன் அடிப்படையிலேயே குறைந்த செலவில் நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார். இதே நேரம் ஆரம்பத்தில் 11 பில்லியன் ரூபாவை கேட்டிருந்தோம் ஆனால் தற்போது மதிப்பீட்டு தொகை 9.3 பில்லியன் ரூபா என்றும் குறிப்பிட்டார். வரவு செலவு திட்டத்தில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
The post குறைந்த செலவில் தேர்தலை நடத்தமுடியும்- சமன் ஸ்ரீ ரத்னாயக்க கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குறைந்த செலவில் தேர்தலை நடத்தமுடியும்- சமன் ஸ்ரீ ரத்னாயக்க கருத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
