கதிர்காமத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி!
7 view
கதிர்காமம் பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் நடந்த இந்த சம்பவத்தில் இரண்டு வயதான சிறுவனே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளை சுற்றுலா விடுதி உரிமையாளர்களின் மகன் என தெரிவருகிறது. சிறுவன் இன்று மதியம் சுற்றுலா விடுதியின் வாசலில் விளையாடிக்கொண்டிருந்துள்ளார். சிறிது நேரத்தின் பின்னர், சிறுவனை காணவில்லை. இதனையடுத்து பெறறோர் சிறுவனை தேடியப்போது சிறுவன் நீச்சல் தடாகத்தில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர். சிறுவன் நீச்சல் தடாகத்தில் இருந்து மீட்கப்பட்ட போது உயிரிழந்தே காணப்பட்டதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி திஸ்ஸமஹாராம திடீர் மரண விசாரணை அதிகாரி, பெற்றோரின் கவனமின்மை காரணமாக ஏற்பட்ட மரணம் என கூறியுள்ளார்.
The post கதிர்காமத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கதிர்காமத்தில் நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
